பைக் - டிப்பர் லாரி மோதல்: தொழிலாளி சாவு
க. பரமத்தி அருகே பைக் மீது டிப்பர் லாரி மோதியதில் தொழிலாளி இறந்தார்.
க. பரமத்தி அருகே பைக் மீது டிப்பர் லாரி மோதியதில் தொழிலாளி இறந்தார்.
கரூர் மாவட்டம் பவித்திரத்தை அடுத்த மேட்டுக்கடையைச் சேர்ந்தவர் சுப்ரமணி(53). தொழிலாளி. இவர் திங்கள்கிழமை இரவு தனது பைக்கில் கரூர் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் குளத்துப்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது, எதிரே வந்த டிப்பர் லாரி பைக் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து க.பரமத்தி போலீஸார் வழக்கு பதிந்து டிப்பர் லாரி ஓட்டுநர் கேரள மாநிலம் திங்கள்கரிக்கோம் பகுதியைச் சேர்ந்த தியாஸ்மன்(34) என்பவர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.