வேன் மோதி முதியவர் சாவு
கரூர் கரூர் மாவட்டம் கீழசக்கரக்கோட்டையைச் சேர்ந்தவர் பெரியசாமி(55). இவர், கடந்த சனிக்கிழமை காலை கரூர் - திண்டுக்கல் சாலையில் காளியப்பனூர் அருகே நடந்து சென்றபோது, பின்னால் வந்த வேன் மோதியதில்
கரூர் கரூர் மாவட்டம் கீழசக்கரக்கோட்டையைச் சேர்ந்தவர் பெரியசாமி(55). இவர், கடந்த சனிக்கிழமை காலை கரூர் - திண்டுக்கல் சாலையில் காளியப்பனூர் அருகே நடந்து சென்றபோது, பின்னால் வந்த வேன் மோதியதில் பலத்த காயமடைந்தார். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை இரவு இறந்தார். இதுகுறித்து பசுபதிபாளையம் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.