கரூர்

பொதுமக்களுக்கான இலவச மருத்துவ முகாம்

DIN

கரூரில் பொதுமக்களுக்கான இலவச கண் பரிசோதனை, சர்க்கரை நோய் மற்றும் பல் பரிசோதனை, ரத்த தானம் வழங்கும் முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கரூரில் எம்பிளாயிஸ் கார்னர்  தன்னார்வ அமைப்பு மூலம் பொதுமக்களுக்கு இலவசமாக கண் பரிசோதனை, சர்க்கரை நோய் மற்றும் பல் பரிசோதனை, ரத்த தானம் வழங்கும் முகாம் ஞாயிற்றுக்கிழமை தன்னார்வ அமைப்பின் இயக்குநர் முகமது உசேன் தலைமையில் நடைபெற்றது. முகாமை பொது மருத்துவர் பக்தவச்சலம் தொடக்கி வைத்தார். 
இதில் கரூர் வேலன், என்பி மருத்துவமனைகளின் மருத்துவர்கள் குழு சார்பில் பொதுமக்களுக்கு கண் பரிசோதனை, பல் மருத்துவம், பொதுமருத்துவம், ரத்த வகை கண்டறிதல், சர்க்கரை நோய் பரிசோதனை நடத்தப்பட்டது. மேலும் கல்லூரி மாணவர்கள், தன்னார்வலர்கள் 50 பேர் ரத்த தானம் வழங்கினர்.  இதில் ரெயின்போ ரத்த வங்கியின் பாண்டியன் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் திரளாகப் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காவலாளி சடலத்தை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டம்

நகைக்கடை உரிமையாளா் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

கடற்கரையில் ஒதுங்கிய ஆண் சடலம்

மேற்கு வங்க இளைஞரிடம் வழிப்பறி: மாணவா்களிடம் விசாரணை

திருவள்ளூா்: வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி கேமராக்களின் செயல்பாடுகள்

SCROLL FOR NEXT