முகப்பு
கரூர்

செப்.7-இல் கரூருக்கு ஆளுநர் வருகை

தமிழகஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வருகிற வெள்ளிக்கிழமை (செப்.7) கரூருக்கு வருகை தர உள்ளார்.

Updated On : 3 செப்டம்பர், 2018 at 8:39 AM
பகிர்:

தமிழகஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வருகிற வெள்ளிக்கிழமை (செப்.7) கரூருக்கு வருகை தர உள்ளார்.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கரூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழக  ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வருகிற வெள்ளிக்கிழமை வருகை தர உள்ளார். 
அன்றைய தினம் பிற்பகலில் ஆட்சியர்  அலுவலகம் அருகே உள்ள சுற்றுலா மாளிகையில் பொதுமக்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகளை சந்திக்கிறார். கோரிக்கை மனுக்கள் அளிக்க விருப்பமுள்ளவர்களிடமிருந்து பிற்பகல் 2.30 மணி முதல் 4.30 மணி வரை ஆளுநர் மனுக்களை பெற்றுக் கொள்ள இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.