தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற செயற்குழு கூட்டம்
தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாவட்ட கிளை செயற்குழு கூட்டம் தாந்தோணிமலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாவட்ட கிளை செயற்குழு கூட்டம் தாந்தோணிமலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் பெர்க்மான்ஸ் தலைமை வகித்தார். செயலாளர் சு.வேலுமணி வரவேற்றார். மாவட்ட மூத்தோர் அணி அமைப்பாளர் சீதாபதி, மாநில இலக்கிய அணி அமைப்பாளர் அழகரசன், மாவட்ட பொருளாளர் தர்மலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து, திருச்சியில் விரைவில் நடைபெறவுள்ள தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற 10ஆவது மாநில மாநாட்டுக்கான ஆயத்தக் கூட்டத்தில், கரூர் மாவட்டம் சார்பில் அதிகளவு நிதியளிப்பை வழங்குவது, பள்ளியில் பயிலும் மாணவர்களின் விவரங்களை(இஎம்ஐஎஸ்) ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்யும் பணியில் இருந்து ஆசிரியர்களை விடுவிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தினர் திரளாக பங்கேற்றனர்.