முகப்பு
கரூர்

மாவட்ட யோகாசானப் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு

கரூரில் மாவட்ட அளவில் நடைபெற்ற சாம்பியன்ஷிப் யோகாசன போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, சான்றுகள் வழங்கப்பட்டன.

Updated On : 3 செப்டம்பர், 2018 at 8:38 AM
பகிர்:

கரூரில் மாவட்ட அளவில் நடைபெற்ற சாம்பியன்ஷிப் யோகாசன போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, சான்றுகள் வழங்கப்பட்டன.
கரூர் மாவட்ட யோகாசனச் சங்கம் மற்றும் விவேகானந்தா யோகா தெரபி மையம் சார்பில் மாவட்ட அளவில் பள்ளி மாணவ, மாணவியருக்கான யோகாசனப் போட்டிகள் மணவாடியில் உள்ள லிட்டில் பிளவர் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
மாவட்டம் முழுவதிலும் 68 பள்ளிகளில் இருந்து 1,682 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.  இதில் கேஜி வகுப்பு பிரிவினர், முதல் வகுப்பு முதல் 3ஆம் வகுப்பு வரை, 4ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை மற்றும் 26 முதல் 35 வயது வரை, 36-50 வயது வரை, 51வயதுக்கு மேற்பட்டோர் என பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது. பள்ளி மாணவ, மாணவியர் பிரிவு  போட்டியில் மாணவர்கள் பிரிவில் லிட்டில் பிளவர் பள்ளி மாணவர் அஜய்குமார் சாம்பியன் பட்டத்தையும், மாணவிகள் பிரிவில் பரணிபார்க் பள்ளி மாணவி நந்திதாஸ்ரீ சாம்பியன் பட்டத்தை வென்றனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன் பரிசுகள் வழங்கினார். ஏற்பாடுகளை மாவட்ட யோகாசன சங்கச் செயலாளர் எம்.மாதவன் தலைமையில் சங்கத்தினர் செய்திருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.