கரூர்

உணவுப்பொருள் தரம் குறித்த புகார்களை கட்செவி அஞ்சலில் தெரிவிக்கலாம்: ஆட்சியர்

DIN

உணவு மற்றும் உணவுப் பொருள்களின் தரம் குறித்த புகார்களை கட்செவி அஞ்சலில் (வாட்ஸ் அப்) தெரிவிக்கலாம் என்றார் மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன்.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்திற்கு ஆட்சியர் த.அன்பழகன் தலைமை வகித்தார். பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 339 மனுக்கள் பெற்றார். இந்த மனுக்களை பரிசீலித்த அவர், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுத்திட உத்தரவிட்டார்.
 கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் கண்பார்வை குறைபாடு உள்ள 3 நபர்களுக்கு நவீன அதிரும் மடக்கு குச்சியையும், 3 நபர்களுக்கு காதொலி கருவிகளையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார். 
முன்னதாக, உணவு மற்றும் உணவுப் பொருள்கள் தரம் பற்றிய புகார்களை, 9444042322 என்ற எண்ணிற்கு குறுந்தகவல் மற்றும் கட்செவி அஞ்சல் மூலம் அனுப்புதவற்கான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்கள் அனைவருக்கும் ஆட்சியர் த.அன்பழகன் வழங்கினார்.  
இந்நிகழ்வுகளில் மாவட்ட வருவாய் அலுவலர் ச.சூர்யபிரகாஷ், துணை ஆட்சியர் (பயிற்சி)விஷ்ணுபிரியா,  மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் லீலாவதி, மாவட்ட வழங்கல் அலுவலர் மல்லிகா, உதவி ஆணையர் (கலால்) மீனாட்சி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜான்சி மற்றும் மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலர் சசிதீபா உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர். 
முஸ்லிம் பெண்கள் பயன்பெற அழைப்பு: தமிழ்நாடு சமூக நல வாரிய கட்டுப்பாட்டின்கீழ் அனைத்து மாவட்டங்களிலும் குடும்ப நல ஆலோசனை மையங்கள் இயங்கி வருகின்றன. இம்மையங்களில் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள், குடும்ப பிரச்னைகள் சுமூகமாக தீர்த்து வைக்கப்படுவதுடன், வரதட்சணை கொடுமைகளிலிருந்து மீட்கவும், குடும்பத்தில் பெண்களாலயே இழைக்கப்படும் கொடுமைகளிலிருந்து காக்கவும், கணவர், அவரின் தாயார் மற்றும் இதர குடும்பத்தாருடன் ஒரு சுமூகமான சூழ்நிலையை ஏற்படுத்தவும் ஆலோசனைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
இத்தகைய கலந்தாய்வு அரவக்குறிச்சி மற்றும் கடவூர் வட்டாட்சியர் அலுவலகங்களில் ஒவ்வொரு புதன்கிழமையும் காலை 10மணி முதல் மாலை 5மணி வரை நடைபெறவுள்ளது. சிறுபான்மையின முஸ்லிம் பெண்கள் இக்கலந்தாய்வு கூட்டத்தில் கலந்து கொண்டு, தேவையான ஆலோசனைகள் பெற்று பயனடைய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தோ்வு: மாநில அளவில் 6-ஆவது இடம்

திருச்சி பாா்வை குறைபாடுடைய பெண்கள்பள்ளி தொடா்ந்து நூறு சதவீதம் தோ்ச்சி

பிளஸ் 2 தோ்வு முடிவுகள் திருச்சி மாவட்டத்தில் 95.74 சதவீதம் போ் தோ்ச்சி

துப்பாக்கிச் சுடும் பயிற்சி வீரமலைப்பாளையத்தில் நடமாட தடை விதிப்பு

9 அரசுப் பள்ளிகள் நூற்றுக்கு நூறு

SCROLL FOR NEXT