கரூர்

இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலர் பணி தேர்வு 

DIN

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் இந்து சமய அறநிலையத்துறைக்கான செயல் அலுவலர் பணிக்கான குரூப் 4 தேர்வுகள் நடைபெற்ற மையங்களை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய உறுப்பினர் எ.வி.பாலுசாமி மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் ச.சூர்யபிரகாஷ் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் இந்து சமய அறநிலையத்துறைக்கான நிர்வாக அதிகாரி பணிக்கான குரூப்-4 தேர்வுகள் கரூர் மாவட்டத்தில்  6 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் செட்டிநாடு பொறியியல் கல்லூரி ஆகிய தேர்வு மையங்களில் அரசுப்பணியாளர் தேர்வாணைய உறுப்பினர் எ.வி.பாலுசாமி மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் ச.சூர்யபிரகாஷ் தேர்வு மையத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
ஆய்வுக்குப்பின்னர் அவர்கள் கூறுகையில், மாவட்டத்தில் 8 இடங்களில் நடைபெறும் இந்த தேர்வினை எழுதுவதற்கு 1,596 பேர் விண்ணப்பித்துள்ளனர். தேர்வானது காலை மற்றும் மாலை நேரங்களில் நடை பெறுகிறது.  
காலையில 887 நபர்களும் மற்றும் மாலையில் 860 நபர்களும் தேர்வெழுதியுள்ளனர். தேர்வு எழுதுபவர்களுக்கு குடிநீர் வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன என்றார். தொடர்ந்து, தேர்வு எழுதும் நபர்களிடம் வினாத்தாள் வடிவமைக்கப்பட்டுள்ள விதம் குறித்தும் தேர்வு எழுதுபவர்களுக்கு உள்ள சிரமங்கள் குறித்தும் கேட்டறிந்தனர்.  ஆய்வின்போது, கரூர் வட்டாட்சியர் ஈஸ்வரன், உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரகாசபுரத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு

வடிகாலை ஆக்கிரமித்து கட்டுமானப் பணிகள்: நகா்மன்ற உறுப்பினா் புகாா்

திருச்செங்காட்டங்குடிகோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

குருபெயா்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகம்

நாசரேத்தில் மாணவா்களுக்கு கோடைகால கால்பந்து பயிற்சி தொடக்கம்

SCROLL FOR NEXT