கரூர்

தேர்தலைக் கண்டு அதிமுக எப்போதும் அஞ்சியதில்லை

DIN


தேர்தலைக் கண்டு அதிமுக எப்போதும் அஞ்சியதில்லை என்றார் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்.
கரூர் ஒன்றிய அதிமுக சார்பில் நன்னியூர் ஊராட்சிக்குட்பட்ட செவ்வந்திபாளையத்தில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற அதிமுக சாதனை விளக்க தெருமுனை பிரசார கூட்டத்தில் அவர் மேலும் பேசியது:
இந்த இடத்தில் சில நாள்களுக்கு முன் திமுகவினர் நடத்திய ஊராட்சி சபை கூட்டத்தை நடத்தியபோது உள்ளாட்சித் தேர்தலை நடத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அச்சப்படுவதாக கூறியுள்ளனர். மறைந்த முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஆனால் அப்போது வார்டு வரையறை செய்ய வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து தேர்தலை வரவிடாமல் தடுத்தவர்கள் திமுகவினர். அதிமுக எப்போதும் தேர்தலைக் கண்டு அஞ்சியதில்லை. இங்கே அமைச்சராக இருந்தவர் அந்தக் கூட்டத்தில் அதிமுக எதுவுமே செய்யவில்லை எனக் கூறியிருக்கிறார். 
நான்கரை ஆண்டுகாலம் அமைச்சராக இருந்த அவர் அப்போது என்ன செய்தாராம்? அடிக்கடி கட்சி மாறும் அவருக்கு நீங்கள் தக்க பாடம் கற்பிக்க வேண்டும். மேலும் அதே கூட்டத்தில் மணல் அள்ள மாட்டுவண்டிக்கு மாதம் ரூ. 5000 வாங்குவதாகவும், எம்.சான்ட் ஆலை வைத்திருப்பதாகவும் கூறியிருக்கிறார். 
எனக்கு எம்.சான்ட் ஆலையும் இல்லை. பணம் வாங்குவதும் இல்லை. இது திமுகவின் பழக்கம். 2016 தேர்தலில் விடியட்டும், முடியட்டும் என ஊர் ஊராக சென்ற மு.க. ஸ்டாலின் பிரசாரத்தை, ஒரே ஒரு சுற்றுப்பயணத்தில் காலி செய்து மீண்டும் ஆட்சியைப் பிடித்தவர் ஜெயலலிதா. இதற்கு முன்பு திமுக ஆட்சிக்கு வந்தது எல்லாமே ஒரு விபத்து போன்றதுதான். 
எனவே யாரும் மனப்பால் குடிக்க வேண்டாம். மக்களிடம் செல்வோம், மக்கள் மனதை வெல்வோம் என எத்தனை கூட்டம் நடத்தினாலும் ஜெயலலிதா போன்று உங்களால் மக்கள் மனதை வெல்ல முடியாது என்றார் அவர். 
ஒன்றியச் செயலர் கமலக்கண்ணன் தலைமை வகித்தார். மாவட்ட அவைத் தலைவர் ஏ.ஆர். காளியப்பன் வரவேற்றார். இதில் க. பரமத்தி ஒன்றியச் செயலர் பி. மார்க்கண்டேயன், மீனவரணி சுதாகரன்,டிஎன்.பி.எல். சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறுமியை திருமணம் செய்தவா் கைது

இடஒதுக்கீட்டை மோடி பறித்துவிடுவாா்: ராகுல் பிரசாரம்

திருவள்ளூா்: 3165 போ் நீட் தோ்வு எழுதினா்

வேலூா் தொகுதியில் வாக்குப்பதிவின்போது எந்த தவறும் நடக்கவில்லை: திமுக வேட்பாளா் டி.எம்.கதிா்ஆனந்த்

பெங்களூரில் இருந்து கடத்தி வரப்பட்ட 181 கிலோ போதைப்பொருள்கள் பறிமுதல்

SCROLL FOR NEXT