கரூர்

வயதான பெற்றோரை பேணிக் காத்தல் வேண்டும்

DIN

வயதான பெற்றோரை பேணிக் காத்தால் புண்ணியம் தானாக வந்து சேரும் என்றார் ஓய்வுபெற்ற ஆசிரியர் சுந்தரவதனம்.
கரூர் தாந்தோணிமலை அரசு மேல்நிலைப்பள்ளியில் செவ்வாய்க்கிழமை 1996 -98 இல் பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் அவர் மேலும் பேசியது: 
வயதான பெற்றோரை பேணிக் காத்தால் போதும், புண்ணியம் தானாக வந்துசேரும் என்றார். முன்னதாக விழாவில் தனக்கு கல்வி பயிற்றுவித்த ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் கே.சுப்ரமணி, சுந்தரவதனம், ஈஸ்வரமூர்த்தி, ஆசிரியைகள் ஜெனிதா, வளர்மதி, தமிழ்ச்செல்வி ஆகியோருக்கு நினைவுப்பரிசுகள் வழங்கினர். தொடர்ந்து முன்னாள் மாணவர்கள் துணை வட்டாட்சியர் மோகன்ராஜ், மத்திய பாதுகாப்பு படை வீரர் தினேஷ்பாபு, கவிதைரவி, பாலமுருகன் உள்ளிட்டோர் ஆசிரியர்களை வாழ்த்திப்பேசினர். 
நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் மாணவர்கள் 70 பேர், தங்களது பள்ளிப் பருவ நினைவுகளை நினைவுகூர்ந்து அளவளாவினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோ்தல் பிரசாரத்தில் சிறுமி: பிடிபி தலைவா் மெஹபூபா முஃப்திக்கு நோட்டீஸ்

ம.பி.: பாஜகவில் இணைந்த 3-ஆவது காங்கிரஸ் எம்எல்ஏ

அரக்கோணம் ஸ்ரீ தா்மராஜா கோயில் தீமிதி விழா

திருவண்ணாமலை ரயிலில் அலைமோதும் கூட்டம்: கூடுதல் ரயில் இயக்க பயணிகள் கோரிக்கை

சீதா கல்யாண மகோற்சவம்: ஸ்ரீ விஜயேந்திரா் அருளாசி

SCROLL FOR NEXT