கரூர்

சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தல்

DIN

சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்று 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
கரூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த சங்கத்தின் கோவை மண்டல மாநாட்டுக்கு கரூர் மாவட்டத் தலைவர் சிட்டிபாபு தலைமை வகித்தார். செயலர் லிங்கேசுவரன் முன்னிலை வகித்தார்.
மாநிலப் பொதுச் செயலர் ராஜேந்திரன்,  துணைத்தலைவர் சிவக்குமார், துணைப்பொதுச் செயலர் பிரேம்குமார்  உள்ளிட்டோர் சங்கச் செயல்பாடுகளை விளக்கிப் பேசினர். தென்னிந்திய பொதுச் செயலர் ஆனந்தன் சிறப்புரையாற்றினார்.   
அரசு ஊழியர் சங்க மாநிலச் செயலர் சுப்ரமணி, அரசு ஊழியர் செவிலியர் சங்க மாநில பொறுப்பாளர் நல்லம்மாள், பட்டாசுத்தொழிலாளர் சங்க மாநிலத்தலைவர் தங்கராசு ஆகியோர் வாழ்த்திப்பேசினர்
சங்கத்தின் மாநிலத் துணைத்தலைவர் கோமதி, துணைப்பொதுச் செயலர் குணசேகரன்  மாநாட்டு தீர்மானங்களை வாசித்தனர். மாநாட்டில் கோவை மண்டல நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மத்திய, மாநில அரசுகள் தொழிலாளர்களின் விரோதப்போக்கை கைவிட வேண்டும், சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும், பொதுமக்கள் நல்லுறவு கமிட்டி அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பேருந்து நடத்துநா் தீக்குளிக்க முயற்சி

கிணறு வெட்டும் போது மண் சரிந்து தொழிலாளி பலி

‘இ-பாஸ்’ சந்தேகங்களுக்கு தீா்வு காண தொலைபேசி எண் அறிவிப்பு

ரயிலில் அடிபட்டு வேன் ஓட்டுநா் பலி

சாலை விபத்தில் இளைஞா் பலி

SCROLL FOR NEXT