கரூர்

வேட்பாளர் அறிவிப்பு: அமமுகவினர் கொண்டாட்டம்

DIN

கரூரில் அமமுகவினர் ஞாயிற்றுக்கிழமை வெடிவெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.
மக்களவைத்தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டார். இதில் கரூர் மக்களவைத் தொகுதிக்கு அக்கட்சியின் கரூர் மாவட்டச் செயலாளர் என்.தங்கவேல் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அக்கட்சியினர் மாவட்ட அவைத்தலைவர் ஆரியூர் சுப்ரமணியன், மாநில எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் ஆர்எம்டி. தியாகராஜன் ஆகியோர் தலைமையில் கரூர் பேருந்துநிலைய ரவுண்டானா பகுதியில் வெடிவெடித்தும், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.  
நிகழ்ச்சியில், காதப்பாறை ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ஏ.தங்கவேல், கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றியச் செயலாளர் மாதவன், கடவூர் ஒன்றியச் செயலாளர்கள் கண்ணன், சண்முகம், பேராசிரியர் சிதம்பரம், காதப்பாறை சுப்ரமணியம் உள்ளிட்ட கட்சியினர் திரளாகப் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வட கொரிய அதிபரின் ‘அந்தப்புரம்’? ஆண்டுக்கு 25 அழகிய பெண்கள்!

பணத்தைவிட நல்ல கதைகளே முக்கியம்: நடிகை ஈஷா ரெப்பா அதிரடி!

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

முன்கூட்டியே சென்னைக்கு பலமான கடற்காற்று: தமிழ்நாடு வெதர்மேன்

பொய்யை ஆயிரம்முறை சொன்னால்... மோடிக்கு கார்கே விளக்கக் கடிதம்

SCROLL FOR NEXT