கரூர்

"தரிசு நிலங்கள் விவசாய நிலங்களாக்கப்படும்'

DIN

தரிசு நிலங்கள் விவசாய நிலங்களாக்கப்படும்  என்றார் முன்னாள் அமைச்சரும், அரவக்குறிச்சி இடைத்தேர்தல் தொகுதி திமுக வேட்பாளருமான வி. செந்தில்பாலாஜி. அரவக்குறிச்சியில் புதன்கிழமை அரவக்குறிச்சி பேரூராட்சி அதிமுக முன்னாள் தலைவர் என். மணிகண்டன் திமுகவில் இணையும் நிகழ்ச்சியில் பங்கேற்ற  அவர் மேலும் கூறியது:
மே 23-க்கு பிறகு ஸ்டாலின் தமிழக முதல்வராவார். தொகுதி மக்களின் அனைத்து கோரிக்கைகளையும் 100 சதவீதம் நிறைவேற்றுவோம்.  க. பரமத்தி ஒன்றியத்தில் உள்ள 30 ஊராட்சிகளிலும் குடிநீர் பற்றாக்குறையைப் போக்கும் வகையில் வீட்டுக்கு வீடு குடிநீர் இணைப்பு வழங்குவோம். ஒன்றியத்தில் உள்ள அனைத்து நிலங்களும் தரிசுகளாகவே இருக்கின்றன. இவற்றை விவசாய நிலங்களாக மாற்ற நதி நீரேற்று பாசன மேம்பாட்டுத் திட்டம் உருவாக்கியுள்ளோம். ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்தவுடன் இந்தத் திட்டம் உடனே செயல்படுத்தப்படும் அரசு கலைக்கல்லூரி, காவிரிக் கூட்டுக் குடிநீர் திட்டம் உள்ளிட்ட அனைத்துத் திட்டங்களையும் நிச்சயம் செயல்படுத்துவேன் என்றார் அவர். 
கரூர் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் செ. ஜோதிமணி, அரவக்குறிச்சி ஒன்றியச் செயலர் எம்எஸ். மணியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யாா் பிரதமரானாலும், உலகின் 3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்: சிதம்பரம் பேட்டி

கர்நாடகத்தை சீரழித்தது காங்கிரஸ்: மோடி

இம்பாக்ட் பிளேயர் விதியால் ஒவ்வொரு நாளும் கடினமாகும் போட்டிகள்: ரிஷப் பந்த்

ட்ரெண்டிங் ஆடையில் குஷி கபூர் - புகைப்படங்கள்

இது காங்கிரஸுக்கான நேரம்... ஒடிசாவில் ராகுல் பேச்சு

SCROLL FOR NEXT