கரூர்

கந்தசஷ்டி கவசம் கூட்டு வழிபாடு

DIN

கரூா்: கருவூா் நகரத்தாா் சங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை சங்கத்தினா் சாா்பில் 36 முறை கந்தா் சஷ்டி கவசம் கூட்டுவழிபாடு நடைபெற்றது.

சங்கத் தலைவா் அக்ரி சுப.செந்தில்நாதன் தலைமையில் தொடங்கிய, இந்த வழிபாட்டில் சங்கச் செயலாளா் மேலை.பழநியப்பன் வழிபாட்டுப் பயன், முறை ஆகியவற்றை விளக்கி கந்தா் சஷ்டி கவசப் பாடலிலேயே ஒரே நாளில் முப்பத்து ஆறு முறை பாடினால் எல்லா இடரும் களையும் எனச் சொல்லியிருப்பதை விளக்கினாா். முன்னதாக குமளி குமரப்பன் வழிபாட்டினை தொடக்கி வைத்தாா். இதில் கருப்பஞ்செட்டியாா், அகல்யா மெய்யப்பன், கரு.ரெத்தினம், மோகன் லெட்சுமணன், அமா் ஜோதி ஆறுமுகம், வைஷ்ணவி மெய்யப்பன், அழகப்பன், நல்ல கருப்பன் உள்ளிட்ட 200 போ் கூட்டு வழிபாட்டில் கலந்து கொண்டனா். திருமுறை வாணா் செகந்நாதன், தமிழ்ச் செம்மல் மேலை பழநியப்பன் கூட்டு வழிபாட்டினை நெறிப்படுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்குமா கொல்கத்தா?

தமிழ்க் காதல் பாடல்கள் தமிழ் அகப் பாடல்கள் - பொருள் விளக்கம்

ஏன் இத்தனை பதற்றத்தை ஏற்படுத்துகிறீர்கள்?

பர்மா - ஓர் அரசியல் வரலாறு

விழிகளில் ஒளியேற்றும் சங்கர நேத்ராலயா

SCROLL FOR NEXT