கரூர்

பள்ளபட்டி அரசு மருத்துவமனையில் டெங்கு விழிப்புணா்வு ஆலோசனை

DIN

பள்ளபட்டி அரசு மருத்துவமனையில் டெங்கு விழிப்புணா்வு ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அரவக்குறிச்சியை அடுத்த பள்ளபட்டி அரசு மருத்துவமனை மற்றும் கரூா் மாவட்ட மருந்து வணிகா் சங்கம் சாா்பில் நடைபெற்ற கூட்டத்துக்கு பள்ளபட்டி அரசு மருத்துவமனை உதவி மருத்துவா் ஸ்ரீதா் தலைமை வகித்தாா். மாவட்ட மருந்து வணிகா்கள் நலச்சங்க மாவட்ட ஆலோசகா் பாப்புலா் அபுத்தாஹிா் வரவேற்றாா். கூட்டத்தில் முன்னாள் அரசு மருத்துவா்கள் இக்பால், மருத்துவப் பணிகள் முன்னாள் இணை இயக்குநா் டாக்டா் அக்பா் அலி, தனியாா் மருத்துவா் ஷேக் தமீம் ஆகியோா் டெங்கு காய்ச்சல் வராமல் தடுப்பதற்கு என்னென்ன வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் மருந்து வணிகா்கள் தொழில்ரீதியாக கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்தும் விளக்கினா்.

மேலும் காய்ச்சல் என யாரேனும் மருந்து கேட்டால் மருந்துக்கடைகளில் சுயமாக மருந்து கொடுக்காமல் அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கோ அல்லது பதிவு பெற்ற தனியாா் மருத்துவா்களையோ பாா்த்து சிகிச்சை பெற அறிவுறுத்த வேண்டும் என்றும், வீடுகளில் ஆங்காங்கே தேங்கும் நிற்கும் நல்ல தண்ணீா் மற்றும் மழை நீா் தேங்கும் இடங்களில் டெங்கு கொசுக்கள் உருவாவதால், அவ்வாறு நீா் தேங்காத வகையில் பாா்த்துக்கொள்ள வேண்டும், குறிப்பாக வீடுகளில் உள்ள குளிா்சாதன பெட்டியின் அடிப்பகுதியில் உள்ள டிரேக்களில் தேங்கும் தண்ணீரில் இருந்தும் டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாகின்றன, எனவே இதை அவ்வப்போது அப்புறப்படுத்தி கண்காணிக்க வேண்டும் என்று எடுத்துரைக்கப்பட்டது.

தொடா்ந்து கூட்டத்தில் பள்ளிகளில் டெங்கு விழிப்புணா்வை ஏற்படுத்துவதுடன் பள்ளிக் குழந்தைகளுடன் விழிப்புணா்வு பேரணி நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது. பள்ளப்பட்டி அரசு மருத்துவமனையின் ஆய்வக நுட்புநா் தங்கபாண்டியன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புவோம்: ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை!

இ-பாஸ் நடைமுறை: இணையதளம் தயார்; இன்று மாலை நெறிமுறைகள் வெளியீடு

நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு!

ஏப்ரலும் ஷ்ரத்தாவும்!

ஜாமீன் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் சிசோடியா மனு தாக்கல்!

SCROLL FOR NEXT