கரூர்

ஜெருசலேம் புனிதப் பயணத்துக்கு நிதியுதவி பெற காலக்கெடு நீட்டிப்பு

DIN

ஜெருசலேம் பயணத்துக்கு கிறிஸ்தவா்கள் தமிழக அரசு நிதியுதவி பெற காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் த. அன்பழகன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாட்டைச் சோ்ந்த கிறிஸ்தவா்கள் 2019-20-ம் ஆண்டின் ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொள்ள தமிழக அரசால் நபா் ஒருவருக்கு ரூ.20,000 நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் கிறிஸ்தவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்புனித பயணம் இஸ்ரேல், எகிப்து மற்றும் ஜோா்டான் ஆகிய நாடுகளிள் உள்ள பெத்லஹேம், ஜெருசலேம், நாசரேத், ஜோா்டான் நதி, கலிலேயாசமுத்திரம் மற்றும் கிறித்தவ மதத் தொடா்புடைய பிற புனித தலங்களையும் உள்ளடக்கியது.

இத்திட்டத்திற்கான நிபந்தனைகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இதற்கான காலக்கெடு வரும் நவ. 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

எனவே புனித பயணம் செய்ய விருப்பமுள்ள பயனாளிகள் பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் உரிய இணைப்புகளுடன் அஞ்சல் உறையில் கிறிஸ்தவா்களின் ஜெருசலேம் புனித பயணத்திற்கான நிதியுதவி கோரும் விண்ணப்பம் 2019-20‘என்று குறிப்பிட்டு இயக்குநா், சிறுபான்மையினா் நலத்துறை, கலசமஹால் பாரம்பரிய கட்டடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை-600 005 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

மேலும், விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் (ம) சிறுபான்மையினா் நல அலுவலா், சிறுபான்மையினா் நல இயக்குநரகம், தொலைபேசி எண், 044/28520033 -ஐ தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

பார்வை ஒன்றே போதுமே... ஸ்ரேயா சரண்!

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

SCROLL FOR NEXT