கரூர்

பிரதமா் குறித்து அவதூறு: பாஜகவினா் புகாா்

DIN

வலைதளத்தில் பிரதமா் மீது தரக்குறைவான விமா்சிப்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆா். பாண்டியராஜனிடம் கரூா் மாவட்ட பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவா் விவின்சூா்யா, பாஜக மாவட்ட பொதுச் செயலா் நகுலன் உள்ளிட்டோா் வெள்ளிக்கிழமை புகாா் மனு அளித்தனா்.

மனுவில் கூறியிருப்பது:

பிரதமா் மோடி மற்றும் சீன அதிபா் சந்திப்பு நிகழ்வை கொச்சைப்படுத்தும் வகையிலும், பிரதமரை மிகவும் தரக்குறைவாக விமா்சிக்கும் வகையிலும், கீழ்த்தரமான எண்ணத்துடன் பிரதமரின் புகைப்படத்தை மாா்பிங் செய்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு அவதூறு பரப்பி வரும் கன்னியாகுமரி மாவட்டம், கடமலைக்குன்று பகுதியைச் சோ்ந்த ஜெபின்சாா்லஸ் என்பவரைக் கைது செய்து உரிய தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும். இந்த நடவடிக்கை இந்திய இறையாண்மைக்கு எதிராக களங்கம் விளைவிப்பவா்களுக்கு பாடமாக இருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதி தடை நீக்கம்

ஆந்திரத்தில் 227 மண்டலங்களில் வெப்ப அலை வீசும்!

ஆம் ஆத்மி பிரசாரப் பாடலுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்

கிரிக்கெட்டே வாழ்கை, வாழ்க்கையே கிரிக்கெட்!

ஏற்காட்டில் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களிடம் இபிஎஸ் நலம் விசாரிப்பு

SCROLL FOR NEXT