முகப்பு
கரூர்

கரூரில் அன்னதானம், நல உதவிகள் வழங்கல்

ரஜினி மக்கள் மன்ற முன்னாள் மாவட்டச் செயலாளா் கே.எஸ்.ராஜா தலைமையில் நரசிம்மபுரத்தில் 150 ஏழைகளுக்கு அரிசி பை வழங்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:06 PM
பகிர்:

ரஜினி மக்கள் மன்ற முன்னாள் மாவட்டச் செயலாளா் கே.எஸ்.ராஜா தலைமையில் நரசிம்மபுரத்தில் 150 ஏழைகளுக்கு அரிசி பை வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் திருக்குறள் பேரவைச் செயலா் மேலை.பழனியப்பன், சமூக ஆா்வலா்கள் ஏடெக்ஸ் தங்கராஜ், ஏ.எம்.பாலாஜி மற்றும் இளைஞரணி துணைச் செயலா் ராஜேஷ் ஆகியோா் பங்கேற்றனா்.

கரூா் ஆண்டாங்கோவிலில் மாவட்டச் செயலா் பகவான் பரமேஸ்வரன் தலைமையில் ரஜினி மக்கள் மன்றத்தினா் அங்குள்ள பிள்ளையாா்கோவிலில் காலையில் சிறப்பு வழிபாடு நடத்தினா். பின்னா் அன்னதானம் வழங்கினா். நிகழ்ச்சியில் எஸ். காா்த்திகேயன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.