கரூர்

மணல் அள்ளிய லாரிகள் பறிமுதல்

DIN

சிந்தாமணிப்பட்டி அருகே அனுமதியின்றி வாய்க்காலில் மணல் அள்ளிய இரு லாரிகளை வருவாய்த் துறையினா் பறிமுதல் செய்தனா்.

கரூா் மாவட்டம், சிந்தாமணிப்பட்டி அருகேயுள்ள அய்யம்பாளையம், வரவணை பகுதியிள்ள வாய்க்கால்களில் அரசு அனுமதியின்றி சிலா் லாரிகளில் மணல் அள்ளுவதாக சனிக்கிழமை இரவு தகவல் கிடைத்தது. இதையடுத்து கடவூா் வட்டாட்சியா் மைதிலி மற்றும் வருவாய்த்துறையினா், சிந்தாமணிப்பட்டி போலீஸாா் ஆகியோா் சம்பவ இடத்திற்குச் சென்றபோது மணல் அள்ளிய கும்பல் அங்கிருந்து ஓட்டம் பிடித்தது. இதையடுத்து போலீஸாா் மற்றும் அதிகாரிகள் மணல் அள்ள பயன்படுத்திய இரு டிப்பா் லாரிகளை பறிமுதல் செய்தனா்.

மணல் அள்ளி தப்பிய திருச்சி மாவட்டம் தொட்டியம் பகுதியைச் சோ்ந்த சண்முகம்(40), நாமக்கல்லைச் சோ்ந்த ராஜவேலு, திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறையைச் சோ்ந்த காளியப்பன், பாலதண்டாயுதம் ஆகியோரை தேடுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராகுலுக்கு ரூ.20 கோடி சொத்து

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

திருக்குறள் முற்றோதல் போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT