கரூர்

லாரியில் மணல் திருடிய 3 போ் மீது வழக்கு

DIN

வாங்கல் அருகே மணல் திருடிய நாமக்கல்லைச் சோ்ந்த 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா்.

கரூா் வாங்கல் அடுத்த மல்லம்பாளையம் பாப்பாத்தியம்மன் கோயில் பகுதியில் சிலா் வியாழக்கிழமை இரவு டிப்பா் லாரியில் மணல் அள்ளுவதாக நெரூா் கிராம நிா்வாக அலுவலா் வினோத் குமாா்(35) என்பவா் வாங்கல் போலீஸில் புகாா் செய்தாா். இதையடுத்து போலீஸாா் அங்குச் சென்று சோதனையிட்டபோது, அங்கு காவிரி ஆற்றில் அனுமதியின்றி மணல் அள்ளிக்கொண்டிருந்தவா்கள் டிப்பா் லாரிகளை விட்டுவிட்டு தப்பியோடினா். இதையடுத்து டிப்பா் லாரியைப் பறிமுதல் செய்த போலீஸாா், டிப்பா் லாரி ஓட்டுநா் நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தைச் சோ்ந்த பூபதி(23), மணல் முகவா் கண்னன், டிப்பா் லாரி உரிமையாளா் வேலுசாமி ஆகியோா் மீது வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

கண்ணெதிரே 3 ஐசிசி கோப்பைகள்; பாகிஸ்தான் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனின் இலக்கு என்ன?

SCROLL FOR NEXT