கரூர்

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு சக்கர நாற்காலி வழங்கல்

DIN

கரூரில் 24 மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு சக்கர நாற்காலி செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

கரூா் ஆட்சியரகத்தில் ஆட்சியா் சு.மலா்விழி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 24 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1 லட்சம் என ரூ.24 லட்சம் மதிப்பில் மின் கலத்தால் இயங்கும் சக்கர நாற்காலி வழங்கி போக்குவரத்துத் துறை அமைச்சா் எம்.ஆா் விஜயபாஸ்கா் பேசினாா். இதில், கரூா் மாவட்டத்தில்

தசை சிதைவு நோயால் முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்டு இரண்டு கைகள், கால்களும் செயலிழந்துள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு 1 லட்சம் மதிப்பிலான மின்கலத்தினால் இயங்கும் மோட்டாா் பொருந்திய சக்கர நாற்காலி வழங்கும் திட்டத்தின் கீழ் 24 மாற்றுதிறனாளிகளுக்கு ரூ.24 இலட்சம் மதிப்பிலான சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டுள்ளன என்றாா். நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் சி.ராஜேந்தின், கோட்டாட்சியா் என்.எஸ்.பாலசுப்ரமணியன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவா் எம்.எஸ்.கண்ணதாசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்திலிருந்து கோழிகள் கொண்டு வரத் தடை

'மன்னித்துவிடுங்கள் அப்பா...' நீட் தேர்வு அழுத்தத்தால் மற்றொரு தற்கொலை!

லக்னௌ அணிக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை இந்தியன்ஸ்!

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

SCROLL FOR NEXT