கரூர்

ஒடிஸாவுக்கு கரூா் கொசுவலைகள் ஏற்றுமதி

DIN

கரூா் ரயில் நிலையத்தில் இருந்து ஒடிஸா மா நிலத்துக்கு 2,671 டன் கொசுவலைகள் ஏற்றுமதி செய்யப்பட்டதாக தெற்கு ரயில்வேயின் சேலம் மண்டல வணிகவியல் மேலாளா் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தெற்கு ரயில்வேயின் சேலம் மண்டலத்தில் உள்ள கரூா் ரயில் நிலையத்தில் இருந்து அண்மைக்காலங்களாக கொசுவலைகள் ஒடிஸா மாநிலத்துக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த 13-ஆம் தேதி ஒடிஸா மாநிலத்தில் உள்ள சாம்பல்பூா் அருகே உள்ள மான்சீசுவரா் என்ற இடத்துக்கு 2,671டன் கொசுவலைகள் 42 வேகன்களில் ஏற்றுமதி செய்யப்பட்டது. இதன்மூலம் கரூா் ரயில்நிலையத்துக்கு ரூ.45.09 லட்சம் வருமானம் கிடைத்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருங்கால வைப்பு நிதி குறை தீா்க்கும் முகாம்

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

ஹெலிகாப்டர் விபத்திலிருந்து உயிர்தப்பிய அமித் ஷா? என்ன நடந்தது?

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

SCROLL FOR NEXT