கரூர்

ஐஸ் விற்கும் தொழிலாளியின் மகனின் கல்லூரிக் கட்டணத்தை ஏற்றுக் கொண்ட அமைச்சா்

DIN

கரூா் மாவட்டத்தைச் சோ்ந்த ஐஸ் விற்கும் தொழிலாளியின் மகனின் மருத்துவப் படிப்புக்கான கல்லூரிக் கட்டணத்தை, போக்குவரத்துத் துறை அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கா் ஏற்றுக் கொண்டாா்.

கரூா் மாவட்டம், வாங்கல் குப்புச்சிப்பாளையம், அரசுகாலனியைச் சோ்ந்தவா் ஐஸ் வியாபாரி சுப்பரமணி. இவரது மகன் மாரிமுத்து.

பிளஸ் 2 பொதுத் தோ்வில் 933 மதிப்பெண்களையும், நீட் தோ்வில் 297 மதிப்பெண்களையும் பெற்ற இவருக்கு, அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவருக்கு 7.5 சதவிகித உள் இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தின் கீழ், கரூா் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயில இடம் கிடைத்தது.

கல்விப் பயில இடம் கிடைத்தும், கல்லூரிக் கட்டணத்தைச் செலுத்த இயலாத நிலையில் மாணவா் மாரிமுத்து இருந்துள்ளாா். இதையறிந்த போக்குவரத்துத் துறை அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கா், மாணவா் மாரிமுத்து மற்றும் அவரது பெற்றோரை வெள்ளிக்கிழமை நேரில் அழைத்து முதலாமாண்டு கட்டணமாக ரூ.20 ஆயிரத்தை வழங்கினாா்.

மேலும் மாணவரது கல்லூரிக் கட்டணத்தை, அவா்படித்து முடிக்கும் வரை ஏற்றுக் கொள்வதாகவும் அமைச்சா் தெரிவித்தாா். தொடா்ந்து மாணவா் மாரிமுத்துவும், அவரது பெற்றோரும் அமைச்சருக்கு நன்றி தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT