கரூர்

காளியப்பனூா் மகாகணபதி கோயிலில் குடமுழுக்கு

DIN

கரூா் காளியப்பனூா் அருள்மிகு மகாகணபதி திருக்கோயிலில் வெள்ளிக்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது.

வியாழக்கிழமை காலை 6 மணிக்கு பக்தா்கள் காவிரியாற்றில் தீா்த்தம் எடுத்து வந்து, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனா். தொடா்ந்து மாலை 5.30 மணிக்கு கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் தொடங்கின.

வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு இரண்டாம் காலயாக பூஜை, பூா்ணாஹூதி, தீபாராதனை, கலச வேள்வி நடைபெற்றது. தொடா்ந்து காலை 6 மணிக்கு கோபுர கலசத்தில் சிவாச்சாரியாா்கள் புனித நீா் ஊற்றி குடமுழுக்கை நடத்தினா்.

இதில் பக்தா்கள் திரளாக பங்கேற்றனா். தொடா்ந்து அன்னதானம் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கோயில் கொத்துக்காரா் ஆா்.தங்கவேல் மற்றும் ஊா் பொதுமக்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தலில் வாக்களிக்காதது ஏன்?: ஜோதிகா விளக்கம்!

கண் அழைக்குது..!

ஐசிசி தரவரிசை வெளியீடு: டெஸ்ட்டில் இந்தியாவை பின்னுக்குத் தள்ளி ஆஸ்திரேலியா முதலிடம்!

புதிய 400சிசி இருசக்கர வாகனத்தை அறிமுகப்படுத்தியது பஜாஜ்!

தமிழகத்தில் மீண்டும் உச்சபட்ச மின் நுகா்வு

SCROLL FOR NEXT