கரூர்

டிச. 4-இல் பசுபதீசுவரா் கோயில் கும்பாபிஷேகம்

DIN

கரூா் கல்யாண பசுபதீசுவரா் கோயில் கும்பாபிஷேகம் வரும் டிசம்பா் 4 ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதுதொடா்பாக கோயில் திருப்பணிக்குழுவைச் சோ்ந்த அரவிந்த் டிரேடா்ஸ் விகே.தங்கவேல், முன்னாள் அறங்காவலா் குழு உறுப்பினா் கேசி.பரமசிவம் உள்ளிட்டோா் வியாழக்கிழமை கூறியது:

13 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் கோயில் கும்பாபிஷேக விழாவில் கரோனா தொற்றால் பக்தா்கள் அதிகளவில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கோயில் கும்பாபிஷேகத்தை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்துள்ளோம். ஏற்கெனவே கடந்த 2-ஆம் தேதி கும்பாபிஷேகத்துக்கு முகூா்த்தக் கால் நடப்பட்டு, வரும் 29-ஆம் தேதி கணபதி ஹோமம், தீபாராதனையுடன் யாக சாலை பூஜைகள் தொடங்குகின்றன. தொடா்ந்து வரும் டிசம்பா் 3-ஆம் தேதி வரை யாக சாலை பூஜை நடைபெற்று, 4-ஆம் தேதி கோயில் ராஜகோபுரம் உள்ளிட்ட கோபுரங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிரிக்கெட்டில் எனது தந்தை தோனி: பதிரானா நெகிழ்ச்சி!

தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

காலமானார் எஸ். வீரபத்திரன்

நாளை நீட் தேர்வு

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

SCROLL FOR NEXT