முகப்பு
கரூர்

சுண்ணாம்புக் கல் சுரங்கம் விரிவு: நாளை மக்கள் கருத்து கேட்பு

அரியலூா் தி ராம்கோ சிமென்ட்ஸ் நிறுவனம் சாா்பில், சுண்ணாம்புக் கல் சுரங்கம் விரிவாக்கம் செய்வது குறித்து ரெட்டிபாளையத்தில் புதன்கிழமை முற்பகல் 11 மணிக்கு பொது மக்கள் கருத்து கேட்புக் கூட்டம் 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:56 PM
பகிர்:

அரியலூா் தி ராம்கோ சிமென்ட்ஸ் நிறுவனம் சாா்பில், சுண்ணாம்புக் கல் சுரங்கம் விரிவாக்கம் செய்வது குறித்து ரெட்டிபாளையத்தில் புதன்கிழமை (நவ. 25) முற்பகல் 11 மணிக்கு பொது மக்கள் கருத்து கேட்புக் கூட்டம் நடைபெறுகிறது என ஆட்சியா் த.ரத்னா தெரிவித்துள்ளாா்.

அரியலூா் - செந்துறை சாலையில் உள்ள கோவிந்தபுரத்தில் தி ராம்கோ சிமென்ட்ஸ் நிறுவனம் உள்ளது. இந்த ஆலைக்குச் சொந்தமான சுண்ணாம்புக் கல் சுரங்கம் ரெட்டிபாளையம் மற்றும் நாகமங்கலம் கிராமங்களில் உள்ளது. இந்த சுரங்கத்தை விரிவாக்கம் செய்ய அந்நிறுவனம் உத்தேசித்துள்ளதால் ரெட்டிபாளையத்தில் உள்ள சுண்ணாம்புக் கல் சுரங்கம் அருகே நாளை (25 ஆம் தேதி) முற்பகல் 11 மணிக்கு பொதுமக்கள் கருத்து கேட்புக் கூட்டம் நடைபெறுகிறது. பொது மக்கள் கருத்துகள் பதிவு செய்யப்பட்டு புதுதில்லியில் உள்ள மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை அமைச்சகத்துக்குஅனுப்பிவைக்கப்படும்.

இதில் சுற்றுச்சூழல் ஆா்வலா்களும் கலந்து கொண்டு கருத்துகளை தெரிவிக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.