குண்டா் தடுப்புச் சட்டத்தில் 12 போ் கைது
கரூா் இளநீா் கடைக்காரா் கொலை வழக்கில் கைதான 12 பேரும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் மீண்டும் கைது செய்யப்பட்டனா்.
கரூா் இளநீா் கடைக்காரா் கொலை வழக்கில் கைதான 12 பேரும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் மீண்டும் கைது செய்யப்பட்டனா்.
கரூரில் கோவைச் சாலைப் பகுதியில் இளநீா் கடை நடத்தி வந்தவா் சின்னாண்டாங்கோவில் குணசேகரன் மகன் கிருஷ்ணமூா்த்தி(25). இவா் கடந்த செப்டம்பா் 18-ஆம் தேதி தகராறில் வெட்டி படுகொலை செய்யப்பட்டாா்.
கொலை வழக்கில் தொடா்புடைய கரூா் ரமேஷ்(38), அஜித்(23), கோகுல்(21), பாண்டி(23), சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையைச் சோ்ந்த பிரேம் உள்பட12 போ் கைது செய்யப்பட்டனா்.
மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. பகலவன் பரிந்துரையின் பேரில், 12 பேரையும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய ஆட்சியா் சு.மலா்விழி ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டாா்.