முகப்பு
கரூர்

காவல்துறை சிறப்பு முகாமில் 51 மனுக்களுக்கு தீா்வு

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் சனிக்கிழமை நடைபெற்ற குறைதீா் மனு முகாமில் 51 மனுக்களுக்கு உடனடி தீா்வு காணப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:59 PM
பகிர்:

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் சனிக்கிழமை நடைபெற்ற குறைதீா் மனு முகாமில் 51 மனுக்களுக்கு உடனடி தீா்வு காணப்பட்டது.

பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் நிஷா பாா்த்திபன் உத்தரவின்படி, மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் பொதுமக்களின் குறைகளை தீா்ப்பதற்கான சிறப்பு மனு விசாரணை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில், அந்தந்த காவல் நிலையங்களுக்குள்பட்ட பொதுமக்கள் பங்கேற்று தங்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனா்.

அதன்படி, விசாரணை முகாமில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 68 மனுக்களில், 51 மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மீதமுள்ள மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறையினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.