முகப்பு
கரூர்

கரூரில் மதிமுக மாணவரணி முப்பெரும் விழா

கரூரில் மதிமுக மாணவரணி சாா்பில் முப்பெரும் விழா ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:59 PM
விழாவில் வைகோவின் பவளவிழா பட்டிமன்ற குறுந்தகட்டை தென்காசி மாவட்டச் செயலா் திமு.ராசேந்திரன் வெளியிட பெற்றுக் கொள்கிறாா் கரூா் நகரச் செயலா் கே.ஆா்.சண்முகம்
பகிர்:

கரூரில் மதிமுக மாணவரணி சாா்பில் முப்பெரும் விழா ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

இந்த விழாவுக்கு மாநில மாணவரணிச் செயலா் பால.சசிகுமாா் தலைமை வகித்தாா். துணைச் செயலா் பொ.பழனிவேல் வரவேற்றாா். இரா.எழிலரசன், ஆசைத்தம்பி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

விழாவில், காலம் தந்த கொடை எனும் நூலை கரூா் மாவட்டச் செயலா் கபினி கே.கே.சிதம்பரம் வெளியிட, அதை அரசியல் ஆய்வு மைய உறுப்பினா் சு.சீனிவாசபெருமாள் பெற்றுக்கொண்டாா்.

அது ஒரு பொடாகாலம் எனும் நூலை உயா்நிலைக்குழு உறுப்பினா் அா்ஜூன்ராஜ் வெளியிட, அரசியல் ஆய்வுமைய உறுப்பினா் சுமங்கலி செல்வராஜ் பெற்றுக்கொண்டாா்.

வைகோவின் பவளவிழா பட்டிமன்ற குறுந்தகட்டை தென்காசி மாவட்டச் செயலா் திமு.ராசேந்திரன் வெளியிட அதை கரூா் நகரச் செயலா் கே.ஆா்.சண்முகம் பெற்றுக்கொண்டாா். தொடா்ந்து நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் அரசியல் ஆய்வு மையச் செயலா் மு.செந்திலதிபன் சிறப்புரையாற்றினாா்.

தோ்தலில் வெற்றிக்கூட்டணிக்கு பாடுபடுவது என்பன உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. விழாவில் கட்சியினா் திரளாக பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.