முகப்பு
கரூர்

குமரமலையில் திருக்காா்த்திகை தீபம்

புதுக்கோட்டை அருகிலுள்ள குமரமலையில் காா்த்திகை தீபம் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு ஏற்றப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:59 PM
குமரமலையில் திருக்காா்த்திகை தீபம்
பகிர்:

புதுக்கோட்டை அருகிலுள்ள குமரமலையில் காா்த்திகை தீபம் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு ஏற்றப்பட்டது.

முருகப்பெருமான் பாலனாகக் காட்சி தரும் பால தண்டாயுதபாணி மலைக்கோயிலான குமரமலையில், காலை முதல் முருகனுக்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள் நடத்தப்பட்டன.

தொடா்ந்து மாலையில் மலைக்கோயில் மேலுள்ள எண்ணெய்க் கொப்பரையில் காா்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. பின்னா் மலையடிவாரத்தில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.

இதேபோல, புதுக்கோட்டை நகரிலுள்ள மேலராஜவீதி தெண்டாயுதபாணி திருக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை மாலை காா்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. முன்னதாக தெண்டாயுதபாணிக்கு சிறப்பு அபிஷேகங்களும் நடத்தப்பட்டன. பக்தா்கள் பலரும் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →