முகப்பு
கரூர்

கரூர் அருகே இரு குழந்தைகளை கொன்றுவிட்டு தாய் தூக்கிட்டுத் தற்கொலை 

கரூர் அருகே இரு குழந்தைகளை கொன்று விட்டு தாய் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:36 PM
கோப்புப் படம்
பகிர்:

கரூர் அருகே இரு குழந்தைகளை கொன்று விட்டு தாய் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திண்டுக்கல் மாவட்டம், ஆர். வெள்ளோடு, நொச்சிப்பட்டியை சேர்ந்தவர் ராம்குமார் (25) லாரி ஓட்டுநராக வேலைபார்த்து வருகிறார். இவர் மனைவி அபர்ணா தேவி (25). இருவரும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு குழந்தைகள் அஸ்வின்(2), நிதின்(6ஆறு மாதம்) உள்ளனர்.  குடும்பத்தோடு ஒன்றரை மாத காலமாக கரூர் மாவட்டம் வழியாம்புதூரில் வசித்து வந்தனர். 

ராம்குமார் அதே பகுதியைச் சேர்ந்த ராம்குமார் கவின், கனகராஜ், பிரபு ஆகியோரிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை காலை வீட்டிலிருந்து கிளம்பி தான் வேலை பார்க்கும் வெடிகாரன்பட்டியைச் சேர்ந்த குமார் என்பவரிடம் பணம் வாங்குவதற்கு சென்றுள்ளார். அப்போது  நவீன், கனகராஜ், பிரபு ஆகிய மூன்று நபர்கள் ராம்குமார் வீட்டிற்கு வந்து பணம் கேட்டு தகாத வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது. 

அதன் பிறகு வீட்டில் இருந்த அபர்ணா தேவி குழந்தைகளுடன் வீட்டை பூட்டி வீட்டுக்குள் சென்றுள்ளார். வெகுநேரம் ஆகியும் வீடு திறக்காத நிலையில் வீட்டின் உரிமையாளர் பெரியம்மா சந்தேகப்பட்டு ராம்குமாருக்கு தகவல் சொல்லியுள்ளார். அவர் வந்து வீட்டை திறந்து பார்த்தபோது பெட்ரூமில் அபர்ணா தேவி தூக்கில் தொங்கியபடியும் குழந்தைகள் இருவரும் தரையில் இறந்த நிலையில் கிடந்துள்ளனர். 

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடம் வந்த டி எஸ் பி சுகுமார், இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம், சப் இன்ஸ்பெக்டர் ஆர்த்தி ஆகியோர் இறந்த பிரதேதத்தை கைப்பற்றி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து வெள்ளியணை காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.