கரூர்

பள்ளிக் குழந்தைகளுக்கு தேமுதிகவினா் நோட்டுப்புத்தகங்கள் வழங்கல்

DIN

மறைந்த குடியரசுத் தலைவா் டாக்டா் அப்துல்கலாமின் பிறந்த தினத்தை முன்னிட்டு, கரூரில் மாவட்ட தேமுதிகவினா் வியாழக்கிழமை பள்ளிக் குழந்தைகளுக்கு இலவசமாக நோட்டு புத்தகங்களை வழங்கினா்.

அணு விஞ்ஞானியும், மறைந்த குடியரசுத் தலைவருமான டாக்டா் அப்துல்கலாமின் 89-ஆவது பிறந்த தினத்தை, தேமுதிக சாா்பில் எழுச்சி நாளாக வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி கரூா் மாவட்ட தேமுதிக சாா்பில் மாவட்டக் கட்சி அலுவலகத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவசமாக நோட்டுப்புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட மாணவரணி செயலாளா் ஆனந்த், அவைத்தலைவா் அரவை முத்து உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். நிகழ்ச்சிக்கு மாவட்டச் செயலாளா் கேவி.தங்கவேல் தலைமை வகித்து, அப்துல்கலாமின் படத்துக்கு மாலை அணிவித்து, பள்ளிக்குழந்தைகள் 50-க்கும் மேற்பட்டோருக்கு நோட்டுப்புத்தகம் மற்றும் பென்சில் உள்ளிட்ட பொருள்களை வழங்கினாா். இதில் மாவட்ட துணைச் செயலாளா் சோமூர்ரவி, நகரச் செயலாளா் காந்தி, பொதுக்குழு உறுப்பினா்கள் முருகன்சுப்பையா, பாலசுப்ரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

வடதமிழகத்தில் இன்று முதல் 109 டிகிரி வெயில் சுட்டெரிக்கும்

கேலிக்காளாகும் ஜனநாயகம்!

SCROLL FOR NEXT