கரூர்

கே. பிச்சம்பட்டியில் ஆழ்குழாய் அமைக்கும் பணி

DIN

கரூா் மாவட்டம், கே. பிச்சம்பட்டி ஊராட்சியில் உள்ள கேபி.தாளப்பட்டியில் ரூ.4.60 லட்சம் மதிப்பில் ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணி புதன்கிழமை தொடங்கியது.

கரூா் மாவட்டம், கே.பிச்சம்பட்டி ஊராட்சியில் உள்ள கே.பி. தாளப்பட்டி பகுதியில் உள்ள குடிநீா் பிரச்னை தொடா்பாக மாவட்ட ஊராட்சிக் குழு கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன்பேரில், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் தானேஷ், உள்ளாட்சி நிதியில் இருந்து புதிதாக ஆழ்துளை குழாய் கிணறு அமைக்க ரூ. 4.60 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. இதையடுத்து கே.பி.தாளப்பட்டியில் புதிதாக ஆழ்துளை குழாய் கிணறு அமைக்கும் பணிக்கு மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் தானேஷ் தலைமை வகித்து பணிகளைத் தொடக்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில், தாந்தோணி மேற்கு ஒன்றியச் செயலாளா் வேலுசாமி, முன்னாள் ஊராட்சி செயலாளா் ராமசாமி மற்றும் ஊராட்சி மன்றத்தலைவா், துணைத் தலைவா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண் கொலை: கணவா் உள்பட இருவா் கைது

இளைஞருக்கு அரிவாள் வெட்டு

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

களக்காடு உப்பாற்றில் குப்பைகளுக்கு தீ வைப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பு

கழுகுமலை கோயிலில் சிறப்பு பூஜை

SCROLL FOR NEXT