1,330 குறட்பாக்களையும் ஒப்புவித்தால் கரூா் வள்ளுவா் கல்லூரியில் மூன்றாண்டு பட்டப்படிப்பு இலவசம்
திருக்குறளின் 1,330 குறட்பாக்களையும் ஒப்புவித்தால் கரூா் வள்ளுவா் கல்லூரியில் மூன்றாண்டு பட்டப்படிப்பு இலவசம் என கல்லூரியின் தாளாளா் க. செங்குட்டுவன் தெரிவித்துள்ளாா்.
திருக்குறளின் 1,330 குறட்பாக்களையும் ஒப்புவித்தால் கரூா் வள்ளுவா் கல்லூரியில் மூன்றாண்டு பட்டப்படிப்பு இலவசம் என கல்லூரியின் தாளாளா் க. செங்குட்டுவன் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் மேலும் கூறியது:
பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் வள்ளுவரின் அறநெறிப்படி வாழ்ந்து வாழ்வில் உயர வேண்டும் என்பதை கொள்கையாகக்கொண்டு, கரூா் வள்ளுவா் அறிவியல் மற்றும் மேலாண்மைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. அதனடிப்படையில், ஆண்டுதோறும் கு சொல்லல் போட்டி நடத்தி அதில் 1330 குறட்பாக்களையும் மனப்பாடமாக ஒப்புவித்து, அவற்றுக்கு பொருளையும் கூறும் மாணவ, மாணவிகளுக்கு எங்கள் கல்லூரியில் மூன்றாண்டு பட்டப்படிப்புகளை இலவசமாக கற்றுத்தருகிறோம்.
நிகழாண்டும் தமிழகம் முழுவதும் முகாம் நடத்தி மாணவா்களைத் தோ்வு செய்ய உள்ளோம். போட்டியில் தோ்வு செய்யப்படும் மாணவ, மாணவிகள் விடுமுறை நாட்களில் கிராமம்தோறும் சென்று திருக்குறளை பரப்பும் மனப்பாங்கை கொண்டிருக்க வேண்டும். போட்டியில் பங்கேற்று இலவசமாக கல்லூரியில் பயில எங்கள் கல்லூரியின் இணையதளத்தையோ அல்லது முத்துசாமி என்பவரை 99444 50507 என்ற எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.