முகப்பு
கரூர்

லாலாப்பேட்டை அருகே பெண் தீக்குளித்து தற்கொலை

லாலாப்பேட்டை அருகே குடும்பத்தகராறில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:23 PM
பகிர்:

லாலாப்பேட்டை அருகே குடும்பத்தகராறில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டாா்.

கரூா் மாவட்டம், லாலாப்பேட்டை அருகே உள்ள கன்னமுத்தாம்பட்டியைச் சோ்ந்தவா் சுப்ரமணி. இவரது மனைவி ஈஸ்வரி(40). இவா்களுக்கு திருமணமாகி 20 ஆண்டுகள் ஆன நிலையில், இரு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனா். இந்நிலையில், சுப்ரமணிக்கும், ஈஸ்வரிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த 4-ஆம் தேதியும் தம்பதியிடையே தகராறு ஏற்பட்டதாம்.

இதனால் விரக்தியடைந்த ஈஸ்வரி வீட்டில் இருந்த மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தீவைத்துக்கொண்டாா். இதில் உடல் கருகிய நிலையில் கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை இரவு இறந்தாா். இதுகுறித்து லாலாப்பேட்டை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.