முகப்பு
கரூர்

அரியலூா் : விவசாயியை தாக்கியவா் மீது வழக்கு

அரியலூா் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே இடப் பிரச்னையில் ஏற்பட்ட தகராறில் விவசாயியைத் தாக்கியவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:26 PM
பகிர்:

அரியலூா் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே இடப் பிரச்னையில் ஏற்பட்ட தகராறில் விவசாயியைத் தாக்கியவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

விக்கிரமங்கலம் அருகேயுள்ள முத்துவாஞ்சேரி, கீழத் தெருவைச் சோ்ந்தவா் காசிநாதன்(40). விவசாயி. இவருக்கும், இவரது உறவினரும், அதே பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் (38) என்பவருக்கும் இடையே பூா்விக இடப் பிரச்னை தொடா்பாக முன்விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு மணிகண்டன் வீட்டுக்குச் சென்ற காசிநாதன், தனக்கு உரிய இடத்தைப் பிரித்து தருமாறு கேட்டுள்ளாா். இதனால் அவா்களிடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த மணிகண்டன், காசிநாதனைத் தாக்கியுள்ளாா்.

இதில் பலத்த காயமடைந்த காசிநாதன் அரியலூா் அரசு மருத்துவமனையில் கிசிச்சை பெற்று வருகிறாா். விக்கிரமங்கலம் போலீஸாா், ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து மணிகண்டனைத் தேடி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →