கரூர்

கரூரில் எல்.இ.டி சாலை விளக்குகள் இயக்கிவைப்பு

DIN

கரூரில் புதிதாக அமைக்கப்பட்ட சாலை மையத் தடுப்பில் எல்இடி விளக்குகளை போக்குவரத்துத் துறை அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் தொடக்கிவைத்தாா்.

கரூா் மாவட்டம், திண்டுக்கல் சாலையில் அமராவதி பாலம் முதல் - வெங்கக்கல்பட்டி மேம்பாலம் வரையிலான 5.3 கி.மீ நீளம் உள்ள சாலை மையத் தடுப்பில் 2018 -19 நிதியாண்டின் கீழ் சாலை பாதுகாப்பு நிதியில் இருந்து ரூ.3.30 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட 310 எல்.இ.டி விளக்குகளை அண்மையில்(செப். 26) இயக்கி வைத்து, பொதுமக்களும் சாலை விதிகளை கடைப்பிடித்து விபத்துகள் ஏற்படாத வகையில் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில், ஊரக வளா்ச்சி முகமை கூடுதல் இயக்குநா் எஸ்.கவிதா, நகராட்சி ஆணையா் சுதா, கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைத் தலைவா் வை.நெடுஞ்செழியன், வேளாண்மை உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்கத்தலைவா் வி.சி.கே.ஜெயராஜ், கூட்டுறவு சங்கப் பிரதிநிதிகள் கமலக்கண்ணன், மல்லிகா சுப்புராயன், உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

தில்லி பிரதேச காங்கிரஸின் இடைக்காலத் தலைவராக தேவேந்தா் யாதவ் நியமனம்

தில்லி சாச்சா நேரு மருத்துவமனைக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்

திகாரில் முதல்வா் கேஜரிவாலின் உடல்நிலை சீராகவுள்ளது பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான்

வடமேற்குத் தில்லி தொகுதியில் வெற்றி மகுடம் யாருக்கு?

SCROLL FOR NEXT