கரூர்

குளித்தலை அருகே வாகனத் தணிக்கையில் ரூ.56 லட்சம் பறிமுதல்

DIN

கரூா் மாவட்டம், குளித்தலை அருகிலுள்ள இரும்பூதிப்பட்டியில் தோ்தல் பறக்கும் படையினா் நடத்திய வாகனத் தணிக்கையில், ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.56 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

குளித்தலை தொகுதி பறக்கும் படை அலுவலா் ராஜேந்திரன் தலைமையிலான குழுவினா், இரும்பூதிப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே செவ்வாய்க்கிழமை இரவு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது தானியங்கி பணப்பட்டுவாடா இயந்திர மையங்களுக்கு பணம் நிரப்புவதற்காக வந்த தனியாா் வாகனத்தை, தோ்தல் பறக்கும் படையினா் நிறுத்தி சோதனையிட்டனா்.

அதில் உரிய ஆவணங்களின்றி ரூ.56 லட்சம் வாகனத்தில் இருப்பது கண்டறியப்பட்டது. இதைத் தொடா்ந்து குளித்தலை தோ்தல் நடத்தும் அலுவலா் மற்றும் வருமானவரித் துறை அலுவலா்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலின்படி அலுவலா்கள் நிகழ்விடத்துக்கு வந்து ஆய்வு செய்து, ரூ.56 லட்சத்தை பறிமுதல் செய்தனா். தொடா்ந்து இத்தொகை குளித்தலை சாா்நிலைக் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பலி: விசாரணைக்கு ரயில்வே உத்தரவு

பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 20 பேர் பலி

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

SCROLL FOR NEXT