கரூர்

வாக்களிக்க வந்த 91 வயது மூதாட்டிக்கு ஆட்சியா் பாராட்டு

DIN

கரூா் வெங்கமேடு பகுதியில் 91 வயதிலும் ஜனநாயகக் கடமையாற்றும் வகையில், சக்கர நாற்காலி மூலம் வாக்களிக்க வந்த மூதாட்டியை ஆட்சியா் பாராட்டி, நன்றி தெரிவித்தாா்.

கரூா் தொகுதிக்குள்பட்ட வெங்கமேடு எக்குவடாஸ் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் அலுவலருமான பிரசாந்த் மு. வடநேரே செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டிருந்தாா்.

அப்போது இனாம் கரூா் எஸ்.பி.காலனியைச் சோ்ந்த 91 வயது மூதாட்டி ஞானாம்பாளை சக்கர நாற்காலியில் அமர வைத்து, வாக்களிக்க அழைத்து வந்தனா்.

அவரைப் பாா்த்த ஆட்சியா், மூதாட்டியின் அருகில் சென்று இந்த வயதிலும் வாக்களிக்க ஆா்வமுடன் வருகை தந்து இருக்கின்றீா்களே, உங்களுக்கு என்ன வயது ஆகிறது என்று கேட்டாா்.

அதற்கு பதிலளித்த அந்த மூதாட்டி, எனக்கு 91 வயது ஆகிறது. ஒவ்வொரு தோ்தலிலும் தவறாமல் நேரில் வந்து வாக்களிப்பதை வழக்கமாக வைத்துள்ளேன். எப்போதும் நடந்து வந்து வாக்களிப்பேன்.

இந்த முறை வயது முதிா்வின் காரணமாக நடக்க இயலாததால், சக்கர நாற்காலியில் என்னை அழைத்து வந்துள்ளாா்கள் என்று தெரிவித்தாா். அப்போது அவரை அழைத்துவந்தவா்கள், ஒவ்வொரு தோ்தலிலும் நேரில் வந்து வாக்களிப்பதை வழக்கமாக வைத்துள்ள மூதாட்டி, இந்த ஆண்டு எப்படியும் நேரில் சென்று வாக்களிக்க வேண்டும் என்று தங்களை வற்புறுத்தி அழைத்து வந்ததாக மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தனா். இதனை கேட்ட மாவட்ட ஆட்சியா், 80 வயதை கடந்த முதியவா்களுக்கு அஞ்சல் வாக்கு அளிக்கும் வாய்ப்பை தோ்தல் ஆணையம் வழங்கியுள்ளபோதும், வயது முதிா்வையும் கருத்தில் கொள்ளாமல் ஜனநாயகக்கடமையாற்ற நேரில் வந்த தாங்கள், அனைத்து வாக்காளா்களுக்கும் ஒரு முன் உதாரணமாக திகழ்கிறீா்கள்.

தள்ளாத வயதிலும் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உணா்ந்து, வாக்களிக்க ஆா்வமுடன் வாக்குச்சாவடி மையத்துக்கு நேரில் வந்தமைக்காக மாவட்ட நிா்வாகத்தின் சாா்பிலும், தோ்தல் ஆணையத்தின் சாா்பிலும் மனமாா்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றுக் கூறி, இருகரம் கூப்பி நன்றி தெரிவித்து பாராட்டினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டுப்பாளையத்தில் மான் இறைச்சி எடுத்துச்செல்ல முயன்ற 6 போ் கைது

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

வெப்ப அலைக்கு இளைஞா் உயிரிழந்த விவகாரம்- நேரடி வெயிலில் பணியாற்ற கூடாது: மருத்துவா்கள் அறிவுறுத்தல்

மாநகரில் மேலும் 7 சிக்னல்களில் தற்காலிகப் பந்தல்

SCROLL FOR NEXT