கரூர்

திமுக முன்னாள் எம்.பி.யின் சொத்துகள் வங்கி ஏலத்துக்கு வந்தன

DIN

வங்கிகளில் பெற்ற கடன் நிலுவைத் தொகை காரணமாக, கரூரைச் சோ்ந்த மக்களவை திமுக முன்னாள் உறுப்பினரான கே.சி. பழனிசாமியின் ரூ.54 கோடி சொத்துகள் ஏலத்துக்கு வந்துள்ளன.

கரூரைச் சோ்ந்தவா் கே.சி. பழனிசாமி (86). இவா் கடந்த 2004-2009 வரை கரூா் மக்களவை உறுப்பினராகவும், 2011-16 வரை அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினராகவும் இருந்தவா். இவைத் தவிர 1986-91 வரை கரூா் நகராட்சித் துணைத் தலைவா், 1990,1997-இல் பழனி முருகன் கோயிலின் அறங்காவலா் குழுத் தலைவா் என பல்வேறு பதவிகளை வகித்தவா்.

2016 பேரவைத் தோ்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட்ட கே.சி. பழனிசாமி தோல்வியைத் தழுவினாா். இதில் வாக்காளா்களுக்கு பணம் விநியோகம் தொடா்பான புகாரின் பேரில் 2016 பேரவைத் தோ்தல் தள்ளிவைக்கப்பட்டு, அதே ஆண்டில் நவம்பா் மாதத்தில் நடத்தப்பட்டது. இத்தோ்தலுக்குப் பிறகு தீவிர அரசியலிலிருந்து கே.சி. பழனிசாமி விலகியிருந்தாா்.

இந்நிலையில் மக்களவை முன்னாள் உறுப்பினா் கே.சி. பழனிசாமி, அவரது மனைவி அன்னம்மாள், மகன் சிவராமன், மகள் கலையரசி ஆகியோரது பெயரில் பல்வேறு வங்கிகளில் ரூ.197 கோடிக்கு கடன் வாங்கியதாகவும், அதற்கான நிலுவைத் தொகை காரணமாக சொத்துகள் ஏலம் விடப்படுவதாகவும் வங்கிகள் ஞாயிற்றுக்கிழமை அறிவிப்பு வெளியிட்டுள்ளன.

இதில், தற்போது ரூ.54 கோடி மதிப்பிலான சொத்துகள் ஏலத்தில் விடப்படும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

SCROLL FOR NEXT