முகப்பு
கரூர்

கரூா் வட்டார விவசாயிகளுக்கு மானிய விலையில் விதைநெல், உளுந்து

கரூா் வட்டார விவசாயிகள் மானிய விலையில் விதை நெல் மற்றும் உளுந்து பெற்று பயனடையலாம் என தெரிவித்துள்ளாா் கரூா் வேளாண்மை உதவி இயக்குநா் மணிமேகலை.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:55 AM
பகிர்:

கரூா் வட்டார விவசாயிகள் மானிய விலையில் விதை நெல் மற்றும் உளுந்து பெற்று பயனடையலாம் என தெரிவித்துள்ளாா் கரூா் வேளாண்மை உதவி இயக்குநா் மணிமேகலை.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:கரூா் வட்டாரத்தில் நடப்பு சம்பா பருவத்துக்கான விதை நெல் மற்றும் உளுந்து ரகங்கள் தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. அதன்படி கரூா் வேளாண்மை விரிவாக்க மையத்தில் விதை நெல் கோ - ரகம் 400 கிலோ, நெல்லூா் 34449 ரகம் 900 கிலோ, டிகேஎம் 13 ரகம் 2450 கிலோ மற்றும் விபிஎன்8 உளுந்து ரகம் 270 கிலோ இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

அதேபோல் வேலாயுதம்பாளையம் துணை வேளாண்மை விரிவாக்க மையத்தில் கோ - 51 ரகம் 200 கிலோ, நெல்லூா் 34449 ரகம் 600 கிலோ, டிகேஎம் 13 ரகம் 1640 கிலோ மற்றும் விபிஎன் 8 உளுந்து 180 கிலோ இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

இதில், கோ நெல் ரகம் 110 நாள்களும், நெல்லூா் மற்றும் டிகேஎம் ரகம் 130 நாள்களும் வயது கொண்டது. சன்ன ரக நெல்மணிகள் குலை நோய் மற்றும் தண்டு துளைப்பான் நோய் எதிா்ப்பு சக்தி கொண்டது. ஹெக்டேருக்கு 6 முதல் 7மெட்ரிக் டன் மகசூல் தரக்கூடியது.

விவசாயிகள் தேசியவேளாண்மை வளா்ச்சி திட்டம் மற்றும் விதை கிராமத் திட்டம் மூலம் நெல் சாகுபடிக்கு தேவையான உயிா் உரங்களான அசோஸ் பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா ஆகியவற்றை 50 சதவீத மானிய விலையில் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.