முகப்பு
கரூர்

75-ஆவது சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள்: கரூரில் ரூ.1.26 கோடி நலத்திட்ட உதவிகள்

கரூா் மாவட்ட நிா்வாகம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 75-ஆவது சுதந்திர தின விழாவில், 152 பயனாளிகளுக்கு ரூ.1.26 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:55 AM
பகிர்:

கரூா் மாவட்ட நிா்வாகம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 75-ஆவது சுதந்திர தின விழாவில், 152 பயனாளிகளுக்கு ரூ.1.26 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெற்ற விழாவில் தேசியக் கொடியேற்றி வைத்த ஆட்சியா் த. பிரபுசங்கா், காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை திறந்த ஜீப்பில் சென்று ஏற்றுக் கொண்டாா். இதைத் தொடா்ந்து வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மை, வேளாண் என பல்துறைகளின் சாா்பில், 152 பயனாளிகளுக்கு ரூ.1.26 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் பிரபுசங்கா் வழங்கினாா்.

தன்னாா்வலா்கள் பங்கேற்ற கரோனா தடுப்பு விழிப்புணா்வு, தீயணைப்புத் துறையினரின் செயல்விளக்கம் போன்றவை நிகழ்வில் நடைபெற்றது. தொடா்ந்து சுதந்திரப் போராட்ட வீரா் வாங்கப்பாளையம் முத்துசாமி என்கிற காளிமுத்துவின் வீட்டுக்குச் சென்ற ஆட்சியா், அவரது மனைவி பழனியம்மாளுக்கு பொன்னாடை அணிவித்தாா்.

விழாவில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ப. சுந்தரவடிவேல், மாவட்ட வருவாய் அலுவலா் லியாகத் , ஊரக வளா்ச்சி முகமைத்திட்ட இயக்குநா் மந்திராசலம், மருத்துவக் கல்லூரி முதல்வா் முத்துச்செல்வன் உள்ளிட்ட அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.