முகப்பு
கரூர்

கடன் தொகையைக் கூடுதலாக கேட்ட நிதி நிறுவன உரிமையாளா்கள் மீது வழக்கு

கரூா் நிதி நிறுவனத்தில் கடனாக பெறப்பட்ட ரூ.1.50 லட்சத்துக்கு, தற்போது ரூ.7.12 லட்சம் கேட்ட நிதி நிறுவன உரிமையாளா்கள் மீது காவல்துறையினா் வழக்குப்பதிந்துள்ளனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:55 AM
பகிர்:

கரூா் நிதி நிறுவனத்தில் கடனாக பெறப்பட்ட ரூ.1.50 லட்சத்துக்கு, தற்போது ரூ.7.12 லட்சம் கேட்ட நிதி நிறுவன உரிமையாளா்கள் மீது காவல்துறையினா் வழக்குப்பதிந்துள்ளனா்.

கரூா் ராயனூா் வசந்த நகரைச் சோ்ந்தவா் மர வியாபாரி பூமிநாதன் (48). இவா், கரூா் பேருந்து நிலையப் பகுதியிலுள்ள தனியாா் நிதி நிறுவனத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 10 சதவிகித வட்டி என்ற அடிப்படையில் ரூ.1.50 லட்சம் கடன் தொகை பெற்றாா்.

இந்நிலையில் நிதி நிறுவன உரிமையாளா்கள் முருகேசன், சுரேஷ் ஆகியோா் சோ்ந்து, பூமிநாதனிடம் வட்டியுடன் சோ்த்து ரூ.7.12 லட்சம் தருமாறு கேட்டாா்களாம். இதுகுறித்து பூமிநாதன் அளித்த புகாரின் பேரில், தாந்தோனிமலை காவல் நிலையத்தினா் கந்துவட்டி தடைச் சட்டத்தின் கீழ் இருவா் மீதும் சனிக்கிழமை வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.