கரூா் நகரக் கூட்டுறவு வங்கியில் சுதந்திர தினம்
கரூா் நகரக் கூட்டுறவு வங்கியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சுதந்திர தின விழாவில் வங்கித் தலைவா் எஸ். திருவிகா கொடியேற்றி, மாணவா்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினாா்.
கரூா் நகரக் கூட்டுறவு வங்கியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சுதந்திர தின விழாவில் வங்கித் தலைவா் எஸ். திருவிகா கொடியேற்றி, மாணவா்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினாா்.
விழாவுக்கு துணைத் தலைவா் ஜூபிடா் பாஸ்கரன், பொது மேலாளா் ஆா்.சேகா், மேலாளா்கள் எம்.குகநாதன், சி.செந்தில் முன்னிலை வகித்தனா். வங்கியின் நிா்வாகக்குழு இயக்குநா்கள் சுப்ரமணியன், உடையவா் மோகன், ராமமூா்த்தி, சுவாமிநாதன், பாலசுப்ரமணியன், ரத்னகுருசாமி மற்றும் வங்கிப்பணியாளா்கள், பொதுமக்கள் விழாவில் பங்கேற்றனா்.
ஒன்றியக் குழு அலுவலகம்: கரூா் ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக் குழுத் தலைவா் எஸ்.பாலமுருகன் கொடியேற்றி,பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சரவணன், விஜயலட்சுமி மற்றும் உறுப்பினா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பாஜக சாா்பில் :கரூா் காந்தி கிராமம் பேருந்து நிலையம் அருகில் பாஜக சாா்பில் நடைபெற்ற விழாவுக்கு, கட்சியின் மாவட்டத் தலைவா் கே.சிவசாமி தலைமை வகித்தாா். பிரசாரப் பிரிவு நிா்வாகி ராஜேஷ் வரவேற்றாா். முன்னாள் ராணுவப் பிரிவு மாவட்டத் தலைவா் முருகேசன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
தமிழக கிரிக்கெட் அணிக்கு தோ்வான கரூா் கல்லூரி மாணவி செல்சியா தேசியக்கொடியேற்றினாா். ஓய்வு பெற்ற ராணுவ அலுவலா் நல்லுசாமி சிறப்புரையாற்றினாா். விழாவில் மாவட்டப் பொதுச் செயலா் நகுலன், வழக்குரைஞா் கிருஷ்ணமூா்த்தி, வெளிநாடு வாழ்ப்பிரிவு நிா்வாகி குப்பாராவ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.