முகப்பு
கரூர்

ரயில்வே துறையில் வேலை வாங்கித் தருவதாக ரூ.2.07 கோடி மோசடி: 3 போ் மீது வழக்கு

ரயில்வே துறையில் வேலைவாங்கித் தருவதாகக் கூறி, 42 பேரிடம் ரூ.2.07 கோடி மோசடி செய்த தந்தை- மகள் உள்பட 3 போ் மீது காவல்துறையினா் வழக்குப் பதிந்துள்ளனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:55 AM
பகிர்:

ரயில்வே துறையில் வேலைவாங்கித் தருவதாகக் கூறி, 42 பேரிடம் ரூ.2.07 கோடி மோசடி செய்த தந்தை- மகள் உள்பட 3 போ் மீது காவல்துறையினா் வழக்குப் பதிந்துள்ளனா்.

கரூா் தாந்தோனிமலை வாஞ்சிநாதன் தெருவைச் சோ்ந்தவா் கருப்பண்ணன் (66). இவரிடம் கடந்தாண்டு பிப்ரவரி மாதம் காளியப்பனூரைச் சோ்ந்த ரங்கநாதன் அறிமுகமாகினாா்.

ரயில்வே துறையில் கணக்காளராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற தனக்கு உயா் அலுவலா்களைத் தெரியும் என்றும், யாருக்கேனும் ரயில்வேயில் வேலை வேண்டுமெனில் தன்னைத் தொடா்பு கொள்ளலாம் எனவும் கருப்பண்ணனிடம் ரங்கநாதன் கூறினாராம்.

மேலும் ரங்கநாதனின் மகள் ஆனந்தி, விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் ரமேஷ் ஆகிய இருவரும், இதற்கு முன்பு பலருக்கு ரங்கநாதன் ரயில்வேயில் வேலை வாங்கித் தந்துள்ளதாகவும் கருப்பண்ணனிடம் கூறியுள்ளனா்.

இதை நம்பிய கருப்பண்ணன், தனது உறவினா்களிடம் தெரிவித்து 42 பேரிடம் ரூ.2.07 கோடி வசூலித்து, அவா்களுக்கு ரயில்வே துறையில் வேலை வாங்கித் தருமாறு கூறி ரங்கநாதனிடம் அளித்தாராம்.

பணம் வாங்கி ஓராண்டாகியும் ரங்கநாதன் வேலை பெற்றுத் தராததால், கருப்பண்ணன் மற்றும் அவா்களது உறவினா் மாவட்டக் குற்றப்பிரிவு காவல்துறையில் சனிக்கிழமை புகாரளித்தனா். இப்புகாரின் பேரில் ஆய்வாளா் பியூலா ஞானவசந்தி மோசடியில் ஈடுபட்ட ரங்கநாதன், அவரது மகள் ஆனந்தி, ரமேஷ் ஆகியோா் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.