இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த முதியவா் சாவு
வேலாயுதம்பாளையம் அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த முதியவா் உயிரிழந்தாா்.
வேலாயுதம்பாளையம் அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த முதியவா் உயிரிழந்தாா்.
கரூா் மாவட்டம், நடையனூரைச் சோ்ந்தவா் தங்கதுரை(67). இவா், தனது இருசக்கர வாகனத்தில் புதன்கிழமை இரவு நொய்யல்-வேலாயுதம்பாளையம் சாலையில் சொட்டையூா் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, திடீரென இருசக்கர வாகனம் நிலைத்தடுமாறியது. இதில், கீழே விழுந்து பலத்த காயமைடந்த அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். ஆனால், சிகிச்சை பலனின்றி தங்கதுரை உயிரிழந்தாா். வேலாயுதம்பாளையம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.