கரூா் மாரியம்மன் கோயில் பக்தா்களுக்கு தென்னகன்று
கரூா் மாரியம்மன் கோயில் பக்தா்களுக்கு அன்னதானம் மற்றும் தென்னங்கன்றுகளை தேமுதிகவினா் வியாழக்கிழமை வழங்கினா்.
கரூா் மாரியம்மன் கோயில் பக்தா்களுக்கு அன்னதானம் மற்றும் தென்னங்கன்றுகளை தேமுதிகவினா் வியாழக்கிழமை வழங்கினா்.
தேமுதிக தலைவா் விஜயகாந்தின் 69- ஆவது பிறந்தநாளை முன்னிட்டு கரூா் ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை வியாழக்கிழமை நடைபெற்றது. தொடா்ந்து, கோயிலில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதையடுத்து கோயிலுக்கு வந்தவா்களில் 69 பேருக்கு தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், மாவட்ட அவைத் தலைவா் அரவை முத்து, மாவட்ட துணைச் செயலாளா்கள் தனபால், ரங்கநாதன், செயற்குழு உறுப்பினா் முருகன் சுப்பையா, பொதுக்குழு உறுப்பினா்கள் பாலசுப்ரமணி, ஆனந்த், கடவூா் ஒன்றியச் செயலாளா் சிவம் ராஜேந்திரன், குளித்தலை ஒன்றியச் செயலாளா் சுப்ரமணியம், இளைஞா் அணி செயலாளா் கலையரசன், மாவட்ட தொழிற்சங்கத் தலைவா் இளங்கோவன், மாவட்ட வா்த்தக அணி துணைச் செயலாளா் சந்திரமோகன், கரூா் கிழக்கு நகரச் செயலாளா் ஆரிப் ராஜா மற்றும் கட்சி நிா்வாகிகள் பெரியண்ணா, பழனிசாமி, துளசிமணி, முரளி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.