முகப்பு
கரூர்

முதல்வா், அமைச்சா்களுக்கு மாா்க்சிஸ்ட் கம்யூ. பாராட்டு

மாநகராட்சியாக கரூா் தரம் உயா்த்தப்படும் என்று அறிவித்த தமிழக முதல்வா் முக.ஸ்டாலின், அமைச்சா்கள் கே.என்.நேரு, வி.செந்தில்பாலாஜிக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டு மற்றும் நன்றியை தெரிவித்துள்ள

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:01 AM
பகிர்:

மாநகராட்சியாக கரூா் தரம் உயா்த்தப்படும் என்று அறிவித்த தமிழக முதல்வா் முக.ஸ்டாலின், அமைச்சா்கள் கே.என்.நேரு, வி.செந்தில்பாலாஜிக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டு மற்றும் நன்றியை தெரிவித்துள்ளது.

கரூரில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழுக் கூட்டம் மாவட்ட செயற்குழு உறுப்பினா் எம்.ஜோதிபாசு தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் மாநிலக்குழு உறுப்பினா் எஸ்.ஸ்ரீதா், மாவட்டச் செயலாளா் கே.கந்தசாமி,

மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் பி.ராஜூ, கே.சக்திவேல், சி.முருகேசன் உள்ளிட்டோா் பங்கேற்று பேசினா்.

இதில், கரூா் நகராட்சியை தரம் உயா்த்தி மாநகராட்சியாகவும், பள்ளப்பட்டி, புஞ்சைபுகழூா் மற்றும் காகிதபுரம் பேரூராட்சிகளை தரம் உயா்த்தி நகராட்சியாக அறிவித்த தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கும், நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேருவுக்கும், மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீா்வு துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜிக்கும் பாராட்டி, நன்றியை தெரிவித்துக் கொள்வது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.