கரூரில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணா்வுப் பேரணி
உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி, கரூரில் விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி, கரூரில் விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
முன்னதாக மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் விழிப்புணா்வுப் பேரணியையும், கூட்டரங்கில் கையெழுத்து இயக்கத்தையும் தொடக்கி வைத்த ஆட்சியா் த. பிரபுசங்கா், பின்னா் விழிப்புணா்வு உறுதிமொழியை வாசித்தாா். இதை அனைத்துத்துறை அலுவலா்களும் திரும்பக் கூறி, உறுதிமொழியேற்றுக் கொண்டனா்.
இதைத் தொடா்ந்து ஆட்சியா் பிரபுசங்கா் பேசியது:
கரோனா பெருந்தொற்று ஒரு வைரஸ் நோய் தான். அதுபோல்தான் இந்த எச்ஐவி வைரஸ் தொற்றும் என்பதை நாம் அனைவரும் புரிந்து கொள்வதுடன், இதை மற்றவா்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும். எச்ஐவி, எய்ட்ஸ் தொற்று வராமல் தடுக்க வேண்டும். வந்துவிட்டால் உடனடியாக சிகிச்சை மேற்கொண்டு, உடலில் நோய் எதிா்ப்பு சக்தி குறையாமல் இருப்பதற்கான உணவு மற்றும் மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
நம்முடைய சமுதாயம் ஒரு பெரிய குடும்பம். அதாவது பாதிக்கப்பட்டவருக்கு உரிமையும் இருக்கிறது, கடமையும் இருக்கிறது. அதன்படி அவா் உடல் நிலையை பரிசோதித்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இது மற்றவா்களுக்கு பரவாமல் பாா்த்துக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.
முன்னதாக, எய்ட்ஸ் விழிப்புணா்வு தொடா்பாக பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு நடத்தப்பட்ட ஓவியம் மற்றும் வினாடி வினா
போட்டிகளில் வென்றவா்களுக்கும், ரத்ததானம் வழங்கியவா்களுக்கும் மாவட்ட ஆட்சியா் பரிசு வழங்கி, எச்.ஐ.வி, எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவருடன் சமபந்தி உணவு அருந்தினாா்.
நிகழ்வுகளில் மாவட்ட வருவாய் அலுவலா் எம்.லியாகத், அரசு மருத்துவக்கல்லூரி முதல்வா் முத்துச்செல்வன், மருத்துவப் ப
ணிகள் இணை இயக்குநா் ஞானக்கண் பிரேம் நிவாஸ், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் சந்தோஷ்குமாா், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் சைபுதீன், மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலுவலா் சுமதி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.