சின்னதாராபுரத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்
சிறுபான்மை மக்களுக்கு எதிராக நடைபெறும் தாக்குதலைக் கண்டித்து, சின்னதாராபுரத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
சிறுபான்மை மக்களுக்கு எதிராக நடைபெறும் தாக்குதலைக் கண்டித்து, சின்னதாராபுரத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் சிறுபான்மை மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதலைக் கண்டிக்கும் வகையில், அகில இந்திய கண்டன நாள் இயக்கம்
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் புதன்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
Advertisement
இதையொட்டி, சின்னதாராபுரம் பேருந்து நிலையம் முன்பு புதன்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, கட்சியின் க. பரமத்தி ஒன்றியச் செயலா் ராமசாமி தலைமை வகித்தாா். மாவட்டச் செயற்குழு உறுப்பினா் சி. முருகேசன், மாவட்டக் குழு உறுப்பினா்கள் ராஜாமுகமது, கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் சிறப்புரையாற்றினா்.
ஆா்ப்பாட்டத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சின்னதாராபுரம் பகுதி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.